பொம்மை என நினைத்து பாம்பை கடித்த 1 வயது குழந்தை - பலியான பாம்பு

Snake Bihar
By Karthikraja Aug 21, 2024 01:00 PM GMT
Report

பொம்மை என நினைத்து, ஒரு வயது குழந்தை பாம்பை கடித்ததில் பாம்பு உயிரிழந்துள்ளது.

ஒரு வயது குழந்தை

பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் கிராமத்தில் வீட்டின் மாடியில் ஒரு வயதான ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்பொழுது பொம்மை என நினைத்து அருகில் ஊர்ந்து கொண்டிருந்த பாம்பை எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது

bihar 1 year old baby bitten snake

குழந்தை வாயில் பாம்பை வைத்து மெல்வதை கவனித்து அதிர்ச்சி அடைந்த தாய் உடனே வாயில் இருந்த பாம்பை பிடிங்கி தூர வீசி விட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

உயிர் பிழைக்க கடித்த பாம்பை திருப்பி கடித்த இளைஞர் - இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?

உயிர் பிழைக்க கடித்த பாம்பை திருப்பி கடித்த இளைஞர் - இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?

பாம்பு பலி

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். குழந்தை கடித்ததில் பாம்பின் உடல் நைந்து உயிரிழந்துள்ளது.மேலும் பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.  

bihar baby bitten snake

இதே போன்று சில மாதங்களுக்கு முன் பிஹாரில் கடித்த பாம்பை, 2 முறை கடித்தால் விஷம் உடலில் ஏறாது என்ற மூட நம்பிக்கையில், தன்னை கடித்த பாம்பை இளைஞர் கடித்ததில் பாம்பு உயிரிழந்தது. இளைஞர் உயிர் பிழைத்து கொண்டார்.