DD logo காவி நிறம் மற்றம்; பாஜக சதி திட்டமா? தூர்தர்ஷன் விளக்கம்!
தூர்தர்ஷன் லோகோ காவி நிறத்தில் மாற்றப்பட்டதற்கு தூர்தர்ஷன் விளக்கமளித்துள்ளது.
லோகோ நிறம் மற்றம்
மத்திய அரசான பாஜக பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியை தொடர்நது பூசி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், அரசின் ஒளிபரப்பு நிறுவனமான தூர்சர்சன் தொலைக்காட்சி சேனல் லோகோ காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதை தொடர்ந்து தேசிய ஒளிபரப்பு சேனலின் லோகோ காவி நிறத்தில் மாற்றியதற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்.
தூர்தர்ஷன் விளக்கம்
தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள் வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள் தற்போது #தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!
[
தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்" என்றார்.
இதனையடுத்து இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தூர்சர்ஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கெளரவ் திவேதி, “தூர்தர்ஷனின் லோகோவின் நிறத்தை பாஜகவுடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது. தூர்சர்சனின் இலச்சியினையின் வண்ணம் காவியல்ல, ஆரஞ்ச் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.