ஆளுநர் தமிழிசை போட்டோவை ஆபாசமாக சித்தரித்த லோன் ஆப் - ஏன்?
ஆளுநர் தமிழிசையின் படத்தை ஆபாசபடமாக சித்தரித்து வெளியிட்டுள்ள லோன் ஆப் மோசடி கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
லோன் ஆப்
சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் டெல்லி கோபி(43). இவர் பாஜகவின் முன்னாள் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி டெல்லி கோபி ராயல் கேஷ் ஆப் மூலமாக ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
அந்த கடனுடைய தேதி நேற்றுடன் முடிவடையவே ஒரு நாள் காலதாமதம் ஆகிய காரணத்தினால் அவருடைய தொலைபேசி முழுவதும் ஹேக் செய்யப்பட்டு பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய நபருடன் இருந்த கோபியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன்
மேலும் கோபி தேடப்படும் குற்றவாளி எனவும் பதிவு செய்து டெல்லி கோபியின் தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.