சிக்கன் பப்ஸில் பல்லி; பகீர் கொடுத்த ஃபாஸ்ட் ஃபுட் கடை - சாப்பிட்ட குடும்பம்!
சிக்கன் பப்ஸில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பப்ஸில் பல்லி
நீலகிரி, குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். அரசுப்பேருந்து ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில், ஃபாஸ்ட் ஃபுட் கடையில், 4 சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று தனது மனைவி, மகன் உட்பட 3 பேரும் இந்த பப்ஸ்களை சாப்பிட்டுள்ளனர்.
4வது பப்ஸை இவரின் மகன் எடுத்து பாதி சாப்பிட்டிருந்த போது கொத்தமல்லி என நினைத்து ஏதோ ஒன்றை தனியே எடுத்துள்ளார். அப்போது அது இறந்த நிலையில் இருந்த பல்லி என தெரிய வந்ததில் அதிர்ச்சியடைந்தனர்.
கடைக்கு பூட்டு
தொடர்ந்து, மருத்துமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று, புகாரளித்தனர். அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடையில் ஆய்வு மேற்கொண்டு, கடைக்கு பூட்டுப் போட்டு சாவியை எடுத்துச் சென்றனர்.
மேலும், தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய உணவக உரிமையாளர்கள் சுயமாக முடிவெடுத்து, கவனமாக உணவு வகைகளை தயார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.