சமோசாவுக்குள் பல்லி வைத்து கொடுத்த கொலைகார பேக்கரி..சிக்கியது எப்படி?

Boy Samosa Lizard
By Thahir Aug 07, 2021 09:20 AM GMT
Report

சமோசாவுக்குள் பல்லி இருந்தது தெரியாமல் அதை சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சமோசாவுக்குள் பல்லி வைத்து கொடுத்த கொலைகார பேக்கரி..சிக்கியது எப்படி? | Lizard Samosa Boy

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லையேந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் இவரது மகன் வாசுதேவன், விடுமுறை என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் சில நாட்கள் இருந்து விட்டு நேற்று மாலை சொந்த ஊர் திரும்புவதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, அங்கு உள்ள ஒரு தனியார் பேக்கரியில் சமோசாக்களை வாங்கி ஒரு பேப்பரில் பார்சல் செய்து வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

தில்லையேந்தலை கிராமத்தில் உள்ள வீட்டை வந்து அடைந்ததும் சிறிது நேரம் நண்பர்களுடன் விளையாடி விட்டு ராமநாதபுரத்திலிருந்து வாங்கிக்கிட்டு வந்த சமோசாக்களில் ஒன்றை மட்டும் எடுத்தது சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் உடம்பெல்லாம் வியர்க்க அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு பதறிப்போன தந்தை கார்மேகம் தன் மகனை ஒரு ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.

இதனிடையே நல்ல ஆரோக்கியத்துடன் விளையாடி கொண்டிருந்த தன் மகன் வாசுதேவனுக்கு திடீரென வாந்தி மயக்கம் வரக்காரணம் என்ன என்று யோசித்த தந்தை கார்மேகம், சிறுவன் வீட்டில் சாப்பிட்ட சமோசாவை பார்த்ததில் அதை பாதி தின்ற நிலையில் மீதி சமோசாவை கீழே வீசியெறிந்ததை பார்த்துள்ளார். அதை எடுத்து பார்த்தத்தில் அரணை எனச் சொல்லப்படும் ஒரு வகை பல்லி இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

அடப்பாவிகளா சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை ஆசையாக வாங்கி சாப்பிடும் திண்பண்டங்களில் இதுபோன்று அஜாக்கிரதையாக விஷ ஜந்துக்களை உள்ளே வைத்து உணவு பொருள் தயாரிப்பது அது எந்த வகையில் நியாயம் என புலம்புகிறார் சிறுவனின் தந்தை கார்மேகம்.

பேக்கரி மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அலட்சியமாகவும் சுகாதாரக்கேடாகவும், உணவுப் பொருட்கள் தயாரிப்பதால் இதுபோன்ற பிரச்சனைளை நுகர்வோர்கள் சந்திக்க நேர்வதால், உணவு பாதுகாப்பு துறையினரும் இது போன்ற உணவு நிறுவனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் வாசுதேவன், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மயக்க நிலையிலிருந்து சற்று தெளிவு அடைந்துள்ளதாகவும் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் சிறுவனின் பெற்றோர்களும், உறவினர்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.