Living together: சந்தேகத்தில் காதலியை அடித்தேக் கொன்ற இளைஞர்!
இளைஞர், காதலியை சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதல் தகராறு
கர்நாடகா, பெங்களூரு தம்புச்செட்டிபாளைய பகுதியில், நேபாளத்தை சேர்ந்த சந்தோஷ் தமணி (27) மற்றும் கிருஷ்ணகுமாரி (23) ஆகியோர், லிவிங் டுகெதரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு பியூட்டி பார்லர்களில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் இளைஞர், காதலியின் கழுத்தை நெறித்து சுவற்றில் தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளார்.
கழுத்தை நெறித்து கொலை
அதன்பின் கிருஷ்ணகுமாரியை தேடி வந்த தோழி, அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
அதனையடுத்து புகாரின் பேரில் அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், ‘‘தன்னை கிருஷ்ணகுமாரி ஏமாற்றுவதாக நினைத்து சந்தேகப்பட்ட சந்தோஷ், அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். கோபத்தில் அவர் கழுத்தை நெரித்ததில் கிருஷ்ணகுமாரி இறந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.