திருமணத்தை மீறிய உறவு - 2 வயது குழந்தையை அடித்துக் கொன்ற காதலன்!
தகாத உறவால் கள்ளக்காதலன் 2வயது குழந்தையை கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
திருவண்னாமலை, ஆரணியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனியில் செவிலியராக பணியாற்றியுள்ளார். அப்போது அங்கேயே எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த குணசேகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் காதலாக மாறி பெற்றோரும் சம்மதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது. அந்த வேளையில் தான் ஜெயசுதாவிற்கு அவரது உறவினரான மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
குழந்தை பலி
அதனையடுத்து அவர் தனது கணவருடன் பிரிந்து அம்மா வீட்டில் வசித்துள்ளார். இதில் இந்த உறவு திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. மாணிக்கத்திற்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன்பின் ஜெயசுதாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ந்து மாணிக்கம் குடித்து விட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை எனவும் சண்டையிட்டுள்ளார். மேலும், ஆத்திரத்தில் குழந்தையை கட்டையால் அடித்துள்ளார். உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அதனையடுத்து புகாரின் பேரிம் போலீஸார் மாணிக்கத்தை கைது செய்துள்ளனர்.