நடுரோட்டில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கிய கள்ளக்காதலன்... - அதிர்ச்சி சம்பவம்
நடுரோட்டில் இளம் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்தி கள்ளக்காதலன் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலனுடன் குடித்தனம்
மத்திய பிரதேச மாநிலம், கஜாபுவாவைச் சேர்ந்த இளம் பெண் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. முகேஷூடன் நீண்ட நாட்களாக தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளார் அப்பெண்.
இந்நிலையில், முகேஷை விட்டு பிரிந்த அப்பெண் மீண்டும் தன் கணவரோடு சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார். தனிமையில் இருந்த முகேஷ் அப்பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு அப்பெண் மறுத்து வந்துள்ளார்.
தாக்குதல்
இதனையடுத்து, தனது கூட்டாளிகள் 5 பேரை அழைத்துக் கொண்டு முகேஷ், நேராக அப்பெண்ணின் கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது, அப்பெண்ணை முகேஷ் தன்னுடன் வாழ வரும்படி கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுக்கவே, 5 பேரும் சேர்ந்து அப்பெண்ணை தர தர என்று சாலைக்கு இழுத்து சென்று வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்ற முயற்சி செய்தனர்.
பெண்ணை நிர்வாணப்படுத்திய கும்பல்
இதற்கு அப்பெண் மறுக்க, அந்தப் பெண்ணை நடுரோட்டில் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி அடித்து சராமரியாக தாக்கினர். அப்பெண்ணின் கணவரும், அவரது உறவினரும் இத்தாக்குதலை தடுக்க, அவர்களையும் அக்கும்பல் கொடூரமாக தாக்கியது.
நெட்டிசன்கள் கண்டனம்
இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கமெண்ட் செய்து வந்தனர்.
4 பேர் கைது
இந்த வீடியோ குறித்து அறிந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.