இன்னும் 4 வருஷம் தான் அப்புறம் ஏலியன்ஸ் - பகீர் கிளப்பும் வாழும் நாஸ்ட்ரடாமஸ்
இன்னும் நான்காண்டுகளில் மனிதர்கள் ஏலியன்கள்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் அதோஸ் சலோமி.
வாழும் நாஸ்ட்ரடாமஸ்
கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, எலிசபெத்மகாராணி மரணம், ட்விட்டரில் செய்யப்பட்ட மாற்றங்கள், உக்ரைன் - ரஷ்யா போர் என உலகின் பல்வேறு நிகழ்வுகளை துல்லியமாக கணித்து வரும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த அதோஸ் சலோமி வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் தொடர்ந்து, வரும் ஆண்டுகளில் உலகில் நடைபெற உள்ள பல்வேறு மாற்றங்களை கணித்து கூறி வருகிறார்.
ஏலியன்கள்
இந்நிலையில் வரும் ஆண்டுகளில் அறிவியல் உலகைத்தையே மாற்றக் கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிலைகளும் என தெரிவித்துள்ளார். மேலும் 2026-2028 ஆண்டுகளில் நாசா ஐரோப்பாவுடன் இணைந்து ஏலியன் தொடர்பான முக்கிய விஷயத்தை கண்டுபிடிப்பார்கள் அது அறிவியல் உலகத்தையே மாற்றக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மனிதர்கள் ஏலியன்கள் என அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாஸ்ட்ரடாமஸ், பாபா வங்கா போன்றோரின் கணிப்புகள் மனித குலத்தை ஆச்சரியப்படுத்தும் வகையில் நடந்து வருகின்றன. அதேபோல் அதோஸ் சலோமியின் கணிப்புகளும் நிஜமாகி வருவதால் இவரின் கணிப்புகளை மக்கள் பெருமளவு நம்புகின்றனர்.