இறந்த நபரின் தொடையில் இருந்து உயிருடன் வந்த பாம்பு - திடுக்கிடும் சம்பவம்!
இறந்த நபரின் உடலில் இருந்து பாம்பு உயிருடன் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சடலம்
அமெரிக்கா, மேரிலாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெசிக்கா லோகன்(31). இவர் கடந்த 9 ஆண்டுகளாக பிரேத பரிசோதனை செய்யும் வேலையை விரும்பி செய்து வருகிறார். வித்தியாசமான வேலையாக இருப்பதால் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிரேத பரிசோதனையின் போது தனக்கு நிகழ்ந்த ஒரு கொடூரமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், இறந்த நபரின் உடலை பரிசோதித்து கொண்டிருந்த சமயத்தில், அவரது உடலில் உயிரோடு இருக்கும் பாம்பு ஒன்றை கண்டுள்ளார் ஜெசிக்கா. உடலின் தொடையில் உயிரோடு பாம்பு இருந்திருக்கிறது.
உடலில் இறந்த பாம்பு
உடனே பதறி அடித்துக் கொண்டு அறையில் இருந்து ஓட்டம் பிடித்தவர், அதனை பிடித்த பிறகு தான் வெளியே வருவேன் என்றும் கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து, இறந்த அந்த நபரின் உடல் ஒரு ஓடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இறந்த பிறகு அந்த உடலுக்குள் பாம்பு புகுந்து இருக்கலாம் என்றும் உடல்கள் சூடாகவும் ஈரமாகவும் இருந்ததால் பூச்சிகள் ஊர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்பதால், குளிர்காலத்தில் சிதைந்த உடலை பரிசோதனை செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.