முதலில் சேர்ந்து வாழ்ந்தால் தான் அடுத்து கல்யாணம் - ஆச்சர்யமா இருக்கே..!
சேர்ந்து வாழ்ந்த பின் திருமணம் என கடைபிடிக்கும் நடைமுறை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
live in
சத்தீஸ்கர், பஸ்தார் பகுதியில் வசித்து வருபவர்கள் பழங்குடியினர் முரியா. இவர்கள் ஊரோடு ஒட்டாமல் தனி இனமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு வித்தியாசமான நடைமுறையொன்று கடைபிடிக்கப்படுகிறது.

என்னவென்றால், ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது காட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் புரிந்து கொள்ள சேர்ந்து வாழ்கின்றனர். இதில், அவர்களது குடும்பமும், சமூகமும் அவருக்கு உதவுகின்றன.
திருமணம்
இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வீட்டிற்கு வெளியே ஒரு தற்காலிக வீடு கட்டித் தரப்படுகிறது. இது கோட்டுல் என்று அழைக்கப்படுகிறது. இதில், இருவரும் சில நாட்கள் ஒன்றாக வாழ்கின்றனர். அதன்பின், இருவரும் தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்கிறார்கள்.
மேலும், இதில் கலப்பு திருமணம் செய்ய அனுமதி இல்லை. ஆணும் பெண்ணும், தனது இனத்தை சேர்ந்தவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது.