Wednesday, Apr 30, 2025

இளைஞரின் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி - அதிர்ந்து போன மருத்துவர்கள்!

Delhi India
By Vidhya Senthil 7 months ago
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

இளைஞரின் குடலிலிருந்து 2 செமீ  உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

டெல்லி

டெல்லியில் 23 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில தினங்களாக வயிற்று வலி மற்றும் அஜீரணக் கோளாறு வயிற்று உப்புசம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

delhi

அங்கு மருத்துவர்கள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது இளைஞரின் சிறு குடலுக்குள் ஒரு கரப்பான் பூச்சி, உயிருடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

என்ன ஒரு புத்திசாலிதனம்..புறாக்களை ஏவி நூதன முறையில் கொள்ளை - சிக்கிய கொள்ளையன்!

என்ன ஒரு புத்திசாலிதனம்..புறாக்களை ஏவி நூதன முறையில் கொள்ளை - சிக்கிய கொள்ளையன்!

இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோபி முறையில் அகற்ற முடிவு செய்தனர். இதற்காக 4 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கபட்டது. எண்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி சுமார்10 நிமிடத்தில் , 3 செ.மீ. கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றினர்.

 கரப்பான் பூச்சி

இது குறித்து காஸ்ட்ரோஎன்டாலஜி மூத்த ஆலோசகர் மருத்துவர் ஷுபம் வாத்ஸ்யா கூறுகையில், இளைஞர் உணவு சாப்பிடம் போது பூச்சியை விழுங்கியிருக்கலாம். அல்லது தூங்கும் போது அது அவரது வாயில் நுழைந்திருக்கலாம்.

cockroach

ஆனால் கரப்பான் பூச்சி எவ்வாறு அப்படியே உயிருடன் இருந்தது என்று நாங்கள் கூட ஆச்சரியப்பட்டோம்" என்று கூறினார். மேலும் சரியான நேரத்தில் சிகிச்சையாக்கப்படாவிட்டால் இது போன்ற வழக்குகள் உயிருக்கு ஆபத்தானவை என்றும் அவர் கூறினார்.