சேலம் அருகே சூட்கேஸில் கிடந்த பெண் சடலம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி சம்பவம்!

Crime Salem Murder
By Vidhya Senthil Oct 30, 2024 06:28 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 சிறுமியைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து சாலையில் வீசி சென்ற சம்பவத்தில் இருவர் கைது செய்துள்ளனர்.

 சேலம்

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவரங்கம்பாளையம் என்ற பகுதியில் கடந்த அக் 01ஆம் தேதி சாலையோர பாலத்திற்கு அடியில் சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கபட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

woman body recovered from suitcase in salem

இதனைத் தொடர்ந்து சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அப்போது சடலம் கண்டெடுத்த இடத்தில் கிடைத்த வெளிநாட்டு வங்கி பெயர் அச்சிட்ட பிளாஸ்டிக் பை கிடைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா,அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர் அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

பிரபல யூட்யூபர் தம்பதி.. தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி - என்ன காரணம்?

பிரபல யூட்யூபர் தம்பதி.. தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி - என்ன காரணம்?

மேலும் வைகுந்தம் சுங்கச்சாவடியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து திரும்பிய வாகனங்களின் பதிவெண்கள், மொபைல் போன் கோபுரத்தில் பதிவான எண்கள் வைத்து விசாரணை நடத்தினர்.

 இருவர் கைது

இதுதொடர்பாக பெங்களூரு, பாகனபள்ளியை சேர்ந்த, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதியான, அபினேஷ்சாகு, 40, அஸ்வின்பட்டில், 37, ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் சங்ககிரி காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அதில் அபினேஷ்சாகு முன்னுக்கு முரணாகப் பதில் அளித்து போனை ஆப் செய்தார்.

woman body suitcase in salem arrest

இதனையடுத்து  ஒடிசாவிலிருந்த, அபினேஷ்சாகு மற்றும் அவரது மனைவி அஸ்வின்பட்டிலை நேற்று கைது செய்த  காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். அதில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரை சேர்ந்தவர் சுமைனா (வயது15) அபினேஷ் சாகுவின் தந்தை நடத்தி வந்த அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தார்.

இதனால் அச்சிறுமியை வீட்டு வேலைக்கு அபினேஷ் சாகு, பெங்களூரு அழைத்து வந்தார். சிறுமி சரியாக வேலை செய்யாத கோபத்தில் தலையில் தாக்கியுள்ளார். அதில் அவர் உயிரிழந்தார். இதனால் சடலத்தை சூட்கேஸில் அடைத்து எடுத்துவந்து, வைகுந்தத்தில் வீசிச்சென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.