ஸ்லோ பாய்சனாக மாறிய உணவு - கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!

Crime Nagapattinam Murder
By Vidhya Senthil Oct 28, 2024 12:12 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

கணவனுக்கு உணவில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை 

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் - சூர்யா தம்பதியினர். 47 வயதாகும் தேவேந்திரன் கீழையூர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தேவேந்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது .

 wife kill husband

இதற்காக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்த போது அவர்க்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது. இதனால் 10 நாட்கள் சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறினார். பிறகு மறுபடியும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.இதனையடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சையிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து அவருக்கு அவசர அவசரமாக இறுதிச்சடங்கும் நடந்து முடிந்து அடக்கம் செய்யப்பட்டது. இந்த சுழலில் மறுநாளிலிருந்தே மனைவி சூர்யா, கலகலவென காணப்பட்டதுடன், எந்நேரமும் தொலைப்பேசியில் ஆனந்தமாகவும் பேசி வந்திருக்கிறார்.

கொடூரத்தின் உச்சம் - ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்.. 42 வயது நபர் செய்த காரியம்!

கொடூரத்தின் உச்சம் - ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்.. 42 வயது நபர் செய்த காரியம்!

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவேந்திரனின் உறவினர் சதீஷ் கண்ணா என்பவர் சந்தேகம் அடைந்து, சூர்யாவின் செல்போனை ஆய்வு செய்துள்ளார். அப்போது தேவேந்திரன் வீட்டில் 15 வருடமாக வேலை செய்யும் சந்திரசேகரன் என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது தெரியவந்தது. இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

  கொலை 

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சூர்யாவிடம் விசாணை மேற்கொண்டனர். குடும்பத்தின் வறுமையைப் பயன்படுத்தி கட்டாய கல்யாணம் செய்ததால், விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகவும்,அப்போது சந்திரசேகரனுக்குடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்காதலாக மாறியுள்ளது.

crime

இது தேவேந்திரனுக்குத் தெரிந்து சூர்யாவைக் கண்டித்ததால், தேவேந்திரனைக் கொலை செய்ய முடிவு கள்ள ஜோடி செய்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகச் சாம்பாரில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

தினமும் விஷத்தையும் கலந்து ஊற்றவேஸ்லோ விசம் உடம்பில் சேர்ந்து, கடைசியில் கல்லீரலைப் பாதித்தது. இதனால் மஞ்சள் காமாலை தாக்கி தேவேந்திரன் உயிரிழந்தார்.