உலகின் டாப் 10 பொருளாதார நாடுகள்.. அமெரிக்கா, சீனா, இந்தியா இல்லை - List இதோ!
உலகின் முதல் 10 பொருளாதாரம் மிக்க நாடுகள் பட்டியல் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொருளாதாரம்
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு அதன் பொருளாதார அளவு மதிப்பிடப்படுகிறது. அதன் அடிப்படையாகக் கொண்டு ஜிடிபியின் அடிப்படையில் உலகின் முதல் பத்து நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது.
சுற்றுலா மற்றும் வணிகத்தின் நோக்கம் ஆக்கியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறந்த முதலீட்டுக் கொள்கைகள் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு கொண்டுள்ளது. 2வது இடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.
சுவிட்சர்லாந்தைத் தொடர்ந்து 3வது ஜெர்மனி, 4 வதுகனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஸ்வீடன், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 13வது இடத்தில் உள்ளது.
நாடுகள் பட்டியல்
இங்கிலாந்து 16வது இடத்திலும், சீனா 19வது இடத்திலும், பிரான்ஸ் 20வது இடத்திலும் உள்ளன.தென் கொரியா 23வது இடத்திலும், ஸ்பெயின் 25வது இடத்திலும், இத்தாலி 28வது இடத்திலும், போலந்து 30வது இடத்திலும், ரஷ்யா 31வது இடத்திலும், துருக்கி 44வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 47வது இடத்தில் உள்ளது. பிரேசில், எகிப்து, இந்தோனேசியா, மெக்சிகோ, அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, ஈரான், பங்களாதேஷ் மற்றும் உக்ரைன் ஆகியவை இந்தப் பட்டியலில் கடைசியில் உள்ளது.