30% முதல் 60% உயர்வு - குடிமகன்களுக்கு ஷாக் கொடுத்த மாநில அரசு - விலை உயர்வு..?
மது மற்றும் பீர் குறைந்த விலையில் விற்கப்படாது என புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டு குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது மாநில அரசு.
விலை உயர்வு
ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து மதுபானக் கடைகளிலும் மதுபானங்களின் விலை அதிகரித்து, ஒவ்வொரு பாட்டிலின் மீதும் 30 முதல் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இம்முறை மதுக்கடைகளின் ஏலம் அதிக விலைக்கு நடந்துள்ளதாலும், ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து மதுபானக் கடைகளிலும் மதுபானங்களின் விலை 30 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கையின் அடிப்படையில்...
ஆனால், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில். அம்மாநிலத்தில் அமைந்துள்ள மதுபானக் கடைகளில் ஒரு பாட்டில் பீர் ரூ.300'க்கும், ரூ.500'க்கு விற்கப்பட்டு வந்த மதுபானத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.700'க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் புதிய கலால் கொள்கை அமல்படுத்தப்பட்ட நிலையில், மது பாட்டில்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மாநில அரசே நிர்ணயிக்கிறது.
ஆனாலும், இப்புதிய கொள்கையின் அடிப்படையில் மதுபானங்களுக்கு தன்னிச்சையான விலையை உயர்த்து வசூலிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அம்மாநிலத்தவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.