டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயர்வு - எப்போது அமலுக்கு வருகிறது தெரியுமா?

Tamil nadu TASMAC
By Jiyath Jan 30, 2024 03:22 AM GMT
Report

மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விலை உயர்வு 

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது "மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயர்வு - எப்போது அமலுக்கு வருகிறது தெரியுமா? | Liquor Prices Rise In Tasmac Tamilnadu

எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 180 மி.லி கொண்ட அளவு கொண்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.

கூகுள் மேப்பை நம்பி குறுக்கு வழியில் சென்ற சுற்றுலா பயணிகள் - சிக்கிய சொகுசு கார்!

கூகுள் மேப்பை நம்பி குறுக்கு வழியில் சென்ற சுற்றுலா பயணிகள் - சிக்கிய சொகுசு கார்!

அறிவிப்பு 

மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375மி.லி., 750மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும்,

டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயர்வு - எப்போது அமலுக்கு வருகிறது தெரியுமா? | Liquor Prices Rise In Tasmac Tamilnadu

325மி.லி., 500மி.லி.,கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.