தீபாவளி விற்பனையில் வசூல் வேட்டை நடத்திய டாஸ்மாக் - அடேங்கப்பா அத்தனை கோடிகளா?
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரு தினங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ. 467 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மது விற்பனை
தமிழகத்தில் பொதுவாக டாஸ்மாக்கின் மூலம் அரசுக்கு ஒரு நாளுக்கு ரூ. 100 கோடி கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. சிறப்பு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதிலும் சில நூறு கொடிகள் அதிகமாக வருமானம் வரும்.
நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் மது விற்பனையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரு தினங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ. 467 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக
தீபாவளிக்கு முந்தைய நாள்(11.11.2023) ரூ.221 கோடிக்கும், தீபாவளி அன்று(12.11.2023) ரூ.246 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகபட்சமாக மதுரையில் ரூ.52 கோடியும், சென்னையில் ரூ.48 கோடிக்கும், கோவையில் ரூ.40 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தீபாவளி அன்று அதிகபட்சமாகத் திருச்சியில் ரூ.55 கோடிக்கும், சென்னையில் ரூ.52 கோடிக்கும், மதுரையில் ரூ.51 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.