குடிமகன்கள் கொண்டாட்டம்;மதுபானங்கள் விலை குறைய வாய்ப்பு..!
பஞ்சாப்பில் மதுபான விலை 30 முதல் 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கலால் வரிக்கு ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான பஞ்சாப் அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இதனால் மதுபானங்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலை குறைய வாய்ப்பு
முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான மாநில அமைச்சரவை,2022-23 ஆம் ஆண்டுக்கான கலால் வரி கொள்கைக்கு நேற்று ஒப்புதல் அளித்தது.
கடந்த ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்தம் ரூ.9,647.85 கோடியை மதுபான விற்பனை மூலம் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இந்தக் கொள்கையானது மதுபானங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கிறது" என்றார்.
இதனிடையே, டெல்லியில் மதுபானங்களுக்காக விதிக்கப்படும் கலால் வரியை இந்த புதிய கலால் வரி கொள்கை பிரதிபலிக்கிறது.
சிலர் பயன்பெற வேண்டும் என்பதால் பஞ்சாப் அரசு டெல்லி மாடலை பின்பற்றுகிறது" என்றார்.
புதிய கலால் வரி கொள்கை ஜூலை 1ம் தேதி முதல் அடுத்த மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். மதுபான விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை மதுப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.