இன்று முதல் டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயர்வு - அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!
தமிழகத்தில் டாஸ்மாக்குகளில் மதுபான விலை இன்று முதல் உயர்ந்துள்ளது.
டாஸ்மாக்
தமிழ்நாட்டில் அரசு சார்பாக டாஸ்மாக்குகள் வருவாய் ஈட்டும் வகையில் செயல்பட்டுவருகிறது. அது மதியம் 12 மணி முதல் திறக்கப்பட்டு விற்பனைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனால் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விலை உயர்வு
இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களான பீர், ஒயின் விலையை அதிகரித்துள்ளது. அதில் மொத்தம் 18 வகையான வெளிநாடு மதுபானங்களின் விலைமை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது.
மேலும், குவாட்டருக்கு ரூ.10 முதல், முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்ந்துள்ளது. இந்த மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.