ரசிகர்களுக்கு காசு கொடுத்து ஆபாச வார்த்தைகளால் திட்ட உத்தரவிட்டுள்ளார் விஜய் - கொந்தளிக்கும் ராஜேஸ்வரி பிரியா..!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவராக இருக்கும் ராஜேஸ்வரி பிரியாவை கடுமையாக விமர்சனம் செய்வதற்காக விஜய் தனது ரசிகர்களுக்கு பணம் கொடுத்து சமூக வலைத்தளங்களில் திட்ட வைப்பதாகவும் நடிகர் விஜய்யை கைது செய்து செய்ய வேண்டும் எனவும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடலுக்கு எதிராக புகார்
அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் ராஜேஸ்வரி பிரியா, தொடர்ந்து, மதுபானம், புகையிலை போன்றவற்றிக்கு எதிராக குரல் கொடுத்து வருவது மட்டும் இன்றி போராட்டங்களையும் முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் ஜூன் 22- ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, “லியோ படத்தில் விஜய் படி, 2000 நடன கலைஞர்களுடன் நடனமாடிய 'நா ரெடி' பாடல் வெளியான நிலையில், இப்பாடல் முழுவதுமே சரக்கு... தம்மு... என போதை ஏற்றும் வார்த்தைகள் கொட்டி கிடந்ததால், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என கூறினார். மேலும் இந்த பாடலுக்கு எதிராக புகார் மனுக்களும் தாக்கல்செய்யப்பட்டது .
இந்த நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு காசு கொடுத்து தன்னை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக திட்ட வைப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
பாடலை தடை செய்ய வேண்டும்
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த மாதம் ஜூன் 22- ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, “லியோ படத்தில் விஜய் படி, 2000 நடன கலைஞர்களுடன் நடனமாடிய 'நா ரெடி' பாடல் வெளியான நிலையில், இப்பாடல் முழுவதுமே சரக்கு... தம்மு... என போதை ஏற்றும் வார்த்தைகள் கொட்டி கிடந்ததால், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என கூறினார். மேலும் இந்த பாடலுக்கு எதிராக புகார் மனுக்களும் தாக்கல்செய்யப்பட்டது.
இந்த பாடலில் இடம்பெற்ற அனைத்து வரிகளுமே, புகை மற்றும் மது சம்பந்தமாகவே இருந்தது. இது போன்ற வரிகள் இளைஞர்களையும், சிறுவர்களையும், பாதிக்கும் வண்ணம் இருந்தது. இந்த வரிகளை நீக்க வேண்டும் என்றும், பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விஜய்க்கு ரசிகர்களாக இருந்தும் கொஞ்சம் கூட சிந்திக்காமல், ஏன் இப்படி ஒரு பாடலில், நடிக்க வேண்டும் என நான் ஒரு பேட்டி கொடுத்திருந்தேன்.
அந்த பேட்டியை சுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருந்தனர். இதன் விளைவாக விஜய் பணம் படைத்தவர் என்பதை காட்டும் விதமாக பல போலி ட்விட்டர் ஐடி-யை தொடங்கச் சொல்லி, பணம் கொடுத்து என்னை பற்றி பல ஆபாசமான வசனங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இப்படி பட்ட செயலை எந்த ஒரு பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாது.
ஆபாச வார்த்தைகளால் திட்டுகின்றனர்
ஒரு சாமானிய பெண்ணாக இருந்து, அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறேன் நான். டாஸ்மாக்கு எதிராக வழக்கு போட்டது நான் தான், மக்களுக்காக பலமுறை கைதாகி உள்ளேன்.
இது போல் தொடர்ச்சியாக மக்களுக்காக போராடிவரும் என்னையே இவ்வளவு ஆபாசமாக கூறி அச்சுறுத்துகிறார் விஜய் என்றால், அதற்கு காரணம் அவர் தான். மேலும் இதுபோன்ற ஆபாச ட்வீட் மற்றும் வீடியோக்களில், விஜய்யின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தை டேக் செய்துள்ளனர். வாங்கிய பணத்திற்கு நாங்கள் வேலை செய்கிறோம் என்பதை விஜய் தெரிந்து கொள்ளும் விதமாக அந்த ஃபேக் ஐடி காரர்கள் விஜய்யை டேக் செய்துள்ளனர் என ராஜேஸ்வரி பிரியா கூறியுள்ளார்.
விஜய் தான் தன்னை ஆபாசமாக பணம் கொடுத்து திட்ட வைக்கிறார், என்பதற்கான ஆதாரங்கள் டிஜிபி அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், யார் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்பதை கண்டுபிடிக்கவே தற்போது புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விஜய்யின் ரசிகர் ஒருவர், தன்னை கொளுத்தி விடுவேன் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.