உதட்டுக்கு பதில் சிறுவனுக்கு அந்தரங்க உறுப்பில் ஆபரேஷன் - கொதித்த உறவினர்கள்
உதட்டு வீக்கத்துக்காக சென்ற சிறுவனின் அந்தரங்க உறுப்பில் மருத்துவர்கள் ஆபரேஷன் செய்துள்ளனர்.
தவறான சிகிச்சை
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்காக 9 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டான்.
சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அப்போது அந்த சிறுவனுக்கு உதட்டில் ஏற்பட்ட காயத்துக்காக ஆண் உறுப்பில் ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
உறவினர்கள் போராட்டம்
உடனே பெற்றோரும், உறவினர்களும் ருத்துவமனை முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின் அறுவை சிகிச்சை கூடத்திற்கு சீல் வைத்தனர். தற்போது இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.