கதறி அழுதபடி வெளியேறிய மெஸ்ஸி; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் - என்ன நடந்தது?

Lionel Messi Football Viral Video Argentina
By Swetha Jul 15, 2024 09:26 AM GMT
Report

வீரர்கள் அறையில் இருந்தபடி மெஸ்ஸி கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

கதறி அழுத மெஸ்ஸி

2024 கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதியது. அதன் 36 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பந்தை அடிக்க முயற்சித்தபோது, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

கதறி அழுதபடி வெளியேறிய மெஸ்ஸி; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் - என்ன நடந்தது? | Lionel Messi Cried After Leaving The Field

இருப்பினும் அவர் தொடர்ந்து ஆட முயன்றார். சில நிமிடங்கள் கழித்து அவரது காயம் இன்னும் மோசமாக தொடங்கியதில் அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. இதனையடுத்து, அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேற நேரிட்டது.

காயத்தால் கடும் வலி ஏற்பட்டதால் தன்னால் போட்டியில் ஆட முடியவில்லை என்பதை எண்ணி அவர் வீரர்கள் அறையில் இருந்தபடி கதறி அழுதார். அந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, அவர் போட்டியின் 64வது நிமிடத்தில் ஆடுகளத்தை விட்டு வெளியேறி இருந்தார்.

Lionel Messi: உலகின் சிறந்த வீரர் - 8வது முறையாக வென்று 'மெஸ்ஸி' சாதனை!

Lionel Messi: உலகின் சிறந்த வீரர் - 8வது முறையாக வென்று 'மெஸ்ஸி' சாதனை!

 என்ன நடந்தது?

அப்போது இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதனால் போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக தன்னால் கோல் அடிக்க முடியவில்லை என்பதை எண்ணி அவர் அழுது இருக்கக் கூடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கதறி அழுதபடி வெளியேறிய மெஸ்ஸி; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் - என்ன நடந்தது? | Lionel Messi Cried After Leaving The Field

இதன் பிறகு, போட்டியின் 112 வது நிமிடத்தில் மார்டினேஸ் அர்ஜென்டினா அணிக்காக கோல் அடித்தார். இதையடுத்து, 1 - 0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா, கொலம்பியாவை வீழ்த்தியது. அர்ஜென்டினா தொடர்ந்து மூன்றாவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதனை படைத்தது.