ரயிலில் இனி இந்த தொல்லை இல்லை - பயணிகளுக்கு குட்நியூஸ்!
ரயில்வே பயணிகளின் வசதி குறித்த முடிவை இந்திய ரயில்வே எடுத்துள்ளது.
வசதியான பயணம்
ரயில் குடும்பமாக செல்பவர்களுக்கும் முதியோர்களுக்கும் வசதியான பயணமாக இருந்து வருகிறது. ஏனென்றால், இரவு நேர பயணம் செய்தால் வசதியாக தூங்கலாம். நினைத்த நேரத்திற்கு கழிப்பறை செல்ல இயலும்.
இதில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு மற்றூம் சில நேரங்களில் தேவைப்பட்டால் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கும் தலையணை, பெட்ஷீட் போன்றவை வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பெட்ஷீட்கள் சுத்தமாக இல்லை. வசதியாகவும் இருப்பதில்லை என பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.
ரயில்வே முடிவு
இதனைத் தொடர்ந்து, தற்போது இதை சரி செய்யும் விதமாக உயர் தரமான மிருதுவான மற்றும் நீண்ட காலம் உழைக்க கூடிய வகையிலான லினென் துணியில் அமைந்த போர்வைகளை பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதற்காக ரயில்வேயின் ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவு நீண்ட நாள் உலகில் உள்ள மற்ற பிரபலமான ரயில்களில் வழங்கப்படும் வசதிகள் அனைத்தையும் ஆய்வு செய்த பிறகே இது கொண்டுவரப்பட்டுள்ளது. முதலாவதாக ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வசதி அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது இந்த வசதியை சோதனை ஓட்டமாகவே தொடங்கியுள்ளோம். பயணிகளிடம் இருந்து கிடைக்கும் கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றை பரிசீலித்து இதில் மாறுதல் ஏதாவது தேவைப்பட்டால் அதற்கேற்ற மாற்றங்களை செய்வோம் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.