பிரம்மாண்ட இயேசு சிலை மீது தாக்கிய மின்னல் - வைரல் ஃபோட்டோஸ்

Brazil Viral Photos
By Sumathi Feb 12, 2023 08:46 AM GMT
Report

இயேசுவின் பிரம்மாண்ட சிலை மீது மின்னல் தாக்கிய நிகழ்வு குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இயேசு சிலை

பிரேசிலில் உலகின் மிக உயரமான இயேசு சிலை உள்ளது. அந்நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மலை பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது 125 அடி உயரம் கொண்டது. இந்த பிரம்மாண்ட சிலை மீது

பிரம்மாண்ட இயேசு சிலை மீது தாக்கிய மின்னல் - வைரல் ஃபோட்டோஸ் | Lightning Strikes Christ Statue In Brazils

மின்னல் தாக்கிய நிகழ்வு தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு அந்த புகைப்படம் மற்றும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இந்த இயேசு சிலை மீது மின்னல் தாக்கிய நிலையில், இந்த இயற்கை நிகழ்வு படம் பிடிக்கப்பட்டுள்ளது.

 மின்னல் தாக்கல்

ஏற்கனவே, 2014ஆம் ஆண்டில் இந்த சிலை மீது மின்னல் தாக்கியது. இதன் காரணமாக சிலையின் விரல் சேதமடைந்தது. இந்த முறை மின்னல் தாக்கியதில் ஏதேனும் சேதமடைந்ததா என்பதை ஆய்வு செய்யவுள்ளனர்.

பிரம்மாண்ட இயேசு சிலை மீது தாக்கிய மின்னல் - வைரல் ஃபோட்டோஸ் | Lightning Strikes Christ Statue In Brazils

மனதைக் கவரும் படம் பெர்னாண்டோ பிராகா என்பவரால் பிடிக்கப்பட்டது. பதிவிட்டதில் இருந்து, இது 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.