மழையில் விளையாடி கொண்டிருந்த சிறுமி...திடீரென தாக்கிய மின்னல் - பகீர் கிளப்பும் வீடியோ!

Viral Video Karnataka
By Swetha Jun 27, 2024 09:30 AM GMT
Report

மாடியில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

விளையாடிய சிறுமி

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த 3 மாநிலங்களிலும் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

மழையில் விளையாடி கொண்டிருந்த சிறுமி...திடீரென தாக்கிய மின்னல் - பகீர் கிளப்பும் வீடியோ! | Lightning Attack On House Girl Scared Video Viral

இந்த மாறி மழைக்காலங்களில் சிறுவர், சிறுமிகள் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி ரசித்து வீடியோவாக பதிவு செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் சித்தமார்க்கி மாவட்டத்தில் பல நாட்களாக வரட்சி நிலவி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

பிரம்மாண்ட இயேசு சிலை மீது தாக்கிய மின்னல் - வைரல் ஃபோட்டோஸ்

பிரம்மாண்ட இயேசு சிலை மீது தாக்கிய மின்னல் - வைரல் ஃபோட்டோஸ்

தாக்கிய மின்னல்

அப்போது சிறுமி ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் மலையில் நனைந்தபடி விளையாடி கொண்டு இருப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அந்த வீட்டின் கூரை மீது மின்னல் ஒன்று தாக்கியது. நல்ல வேலையாக இந்த சம்பவத்தில் சிறுமிக்கு எந்த காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினார்.

தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், மழை பெய்யும் போது வெட்டவெளிகள், மரங்களின் கீழ் அல்லது மொட்டைமாடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.