அறுந்து விழுந்த லிஃப்ட் - 2000 அடி பள்ளத்தில் சிக்கிய அதிகாரிகள் நிலை?
லிஃப்ட் அறுந்து பள்ளத்தில் விழுந்த அதிகாரிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
லிஃப்ட் விபத்து
ராஜஸ்தான், ஜுன்ஜுனு மாவட்டத்தில் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்திற்கு சொந்தமான கோலிஹான் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.
2000 அடி ஆழத்தில் இருக்கும் இந்த சுரங்கத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த விஜிலென்ஸ் குழுவைச் சேர்ந்த 14 அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வை முடித்துவிட்டு ஃப்ட் மூலம் அவர்கள் மேலே வந்து கொண்டிருந்தபோது, திடீரென கயிறு அறுந்து உள்ளே விழுந்தனர்.
மீட்பு பணி தீவிரம்
தலைமை விஜிலென்ஸ் அதிகாரி உபேந்திர பாண்டே, கேத்ரி காப்பர் காம்ப்ளக்ஸ் தலைவர் ஜி.டி.குப்தா, கோலிஹான் சுரங்கத்தின் துணை பொது மேலாளர் ஏ.கே.சர்மா உள்ளிட்ட 13 பேரும், சுரங்கத்தை புகைப்படம் எடுக்கச் சென்ற ஒரு பத்திரிகையாளரும் சிக்கிக் கொண்டனர்.
உடனே தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர், 3 பேரை லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் மேலும் 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், 6 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.