யோகா செய்ய நேரம் இல்லையா ? அப்போ இதை பண்ணுங்க போதும்..!
உடல் ஆரோக்கியம் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் யோகா பயிற்சிகளைத் தினசரி செய்யத் தனியாக நேரம் ஒதுக்க முடியாத நபர்கள் , தங்கள் தினசரி வேலைகளுடன் யோகா பயிற்சிகளைச் சேர்ந்து செய்வது எப்படி என இந்தப் பதில் பார்க்கலாம் .
வீட்டு வேலைகளுடன் யோகாசனம்:
விரிசா சன: விரிசாசனம் என்பது நின்ற நிலையில் செய்யும் ஒரு யோகா பயிற்சி ஆகும் .இந்தப் பயிற்சியினை நீங்கள் வீட்டில் சமையல் செய்யும் பொது வீட்டைத் துடைப்பது போன்ற வீட்டு வேலைகளுடன் சேர்ந்தது முயற்சி செய்து பார்க்கலாம். இந்தப் பயிற்சியால் கால்களுக்கு நல்ல வலுக் கிடைக்கும்.
வீராசனம் : இந்த ஆசனம் மூட்டுகளை மடித்த நிலையில் அமர்ந்தபடி ,செய்யும் ஓர் ஆசனம் . இது உடலில் செரிமானத்தைத் தூண்டும். இந்த ஆசனம் நாம் வீட்டில் செய்யும் வேலைகளுடன் ஒத்துப்போகிறது. அதாவது துணிகளை மடித்து வைப்பது ,காய்களை வெட்டும் போது நமது கால்களை மடக்கி தரணியில் அமர்ந்து செய்வதாகும்.
மனுசனாம் : இந்த ஆசனம் குறிப்பாகப் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்த்தது. மனுசனா கருப்பையைச் சுத்தம் செய்ய உதவும் . கட்டாயம் பெண்கள் இதனை முயற்சி செய்ய வேண்டும். இந்த ஆசனம் வீட்டில் துணிகளைத் துவைக்கும் பொது இதைச் செய்ய முயற்சிகளாம் .
சுகாசனம்:
இயல்பான நிலையில் அமர்ந்தபடி செய்யும் ஓர் எளிய ஆசன முறையாகும். வீட்டில் உள்ள காய்கறிகளை நறுக்கும் போது , சிறு பொருட்களைச் சுத்தம் செய்து வைப்பது போன்ற வேளைகளில் இந்த ஆசனத்தைச் செய்து முயற்சிகளாம்.
தடாசனம் : 30 வயத்தை எட்டும் பெண்கள் எதிர்கொள்ளும் முதுகு வடம் தண்டு வளைதல் பிரச்சனையைத் தடுக்கும் ஒரு சிறந்த ஆசனம் ஆகும் . இந்த தடாசனத்தை தினசரி வீட்டு வேலைகளுடன் பெண்கள் சேர்ந்து முயற்சிக்கலாம்.