100 வயதுக்கு மேல் உயிர் வாழும் மக்கள் - இதுதான் சீக்ரெட்
ஜப்பானியர்கள் தான் உலக அளவில் நீண்ட வருடங்கள் உயிர் வாழ்கிறார்கள்.
ஜப்பானியர்கள்
இவர்கள் அதிக காய்கறிகள், அரிசி உணவு, டோஃபு, மீன், கடல்பாசி, நொதித்த உணவுகள் என பேலன்ஸ்டு டயட்டை பின்பற்றுகிறார்கள்.

80 சதவீதம் வயிறு நிறைந்தாலே சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். பொரித்த உணவுகளை விரும்பி உண்ண மாட்டார்கள். அதற்கு பதிலாக தீயில் சுட்டு சாப்பிடுவதை அதிகம் விரும்புகிறார்கள்.
வாழ்க்கை முறை
புளித்த சாப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு பழைய சோறு, கேப்பங்கூழ், கம்பங்கூழ் உள்ளிட்டவைகளை உட்கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் வேக வைத்ததை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்வது என உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்திருப்பார்கள். வயதாகும்போது இன்னும் அதிகமாக சமூகத் தொடர்புடன் இருப்பார்கள். ரீயூனியன், விழாக்கள், கொண்டாட்டங்கள் என மன, உணர்வு ரீதியான ஆரோக்கியத்தை பேணுவார்கள்.
இந்தியர்களால் 72 வயது வரைதான் சராசரியாக வாழமுடிகிறது. அதிலும் கடைசியாக 4 ஆண்டுகளுக்கு மாத்திரை மருந்துகளை உட்கொண்டுதான் வாழ முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.