லெஸ்பியன் ஜோடி: ஆத்திரத்தில் கொடூரமாக தாக்கி மர்ம நபர்கள் வெறிச்செயல்!
தன்பாலின ஜோடிகளை, மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லெஸ்பியன் ஜோடி
மேற்கு வங்கம், அவதுவா கிராமத்தில் இரு பெண்கள் தனியாக வசித்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டிற்குள் இரவில் மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்துள்ளது. இதில் அந்த பென்களின் உறவினர் மூவர் உட்பட சென்றுள்ளனர்.
மேலும், இரு பெண்கள் எப்படி ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அவர்களை ஆபாசமாக திட்டி, லெஸ்பியனாக இருப்பது பாவல் எனவும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் பிறப்புறுப்பில் சூடான் இரும்பு கம்பிகலை நுழைத்து கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர்.
மர்ம நபர்கள் தாக்குதல்
இதை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். அதனையடுத்து அந்த 3 ஆண்களும் அப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ள நிலையில் இருவரும் ஓடி அங்கிருந்து வயல் பகுதிக்குள் சென்று தப்பியுள்ளனர்.
அதன்பின், போலீஸில் இதுகுறித்து புகாரளித்துள்ளனர். மூன்று பேரில் ஒருவரான சாஹேபுல் ஷேக் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள இருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேதனை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், "நாங்கள் உறவில் இருப்பது அனைவருக்கும் தெரியும். யாரும் எதுவும் சொல்லவில்லை.அப்படி அவர்கள் கூடாது எனச் சொல்லியிருந்தால்.. எங்கள் உறவைத் தொடராமலேயே போயிருப்போம். ஆனால், இந்த மூன்று பேரும் அத்துமீறி வீட்டில் நுழைந்து அந்தரங்க பகுதிகளை தொட்டனர்.
பலாத்காரம் செய்ய முயன்றனர். வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் கடுமையாக தாக்கினர் என வேதனை தெரிவித்துள்ளார்.