வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட லெஸ்பியன் ஜோடி - வைரலாகும் புகைப்படம்!
கொல்கத்தாவை சேர்ந்த லெஸ்பியன் ஜோடி பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
திருமணம்
மேற்கு வாங்கலாம், கொல்கத்தா மாவட்டத்தை சேர்ந்த மவுசுமி தத்தா மற்றும் மவுமிதா மஜூம்டர் என்ற லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் கடந்த திங்கட்கிழமை கொல்கத்தாவில் ஜோவா பஜாரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து, இவர்களின் பாரம்பரிய பெங்காலி சடங்குகளுடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
லெஸ்பியன் ஜோடி
இந்நிலையில், மவுசுமி தத்தா என்பவர் கூறுகையில், "காதலிக்கும் போது பாலினம் பார்ப்பது கிடையாது. சரியான நபர் தான் முக்கியம்.
அன்பு அனைவரையும் வெல்லும். அன்பு இருக்கும் இடத்தில் பாகுபாடு இருக்க முடியாது.
இது சமூகத்தை பற்றியது அல்ல, அவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள், யாருடன் தங்கள் வாழ்க்கையை செலவிட விரும்புகிறார்கள் என்பதை பற்றித்தான்.
மேலும் தங்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றும் கூறியுள்ளனர்.
தற்போது இது அனைவராலும் பேசப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.