கொல்கத்தாவை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்..!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில அபார வெற்றி பெற்றது.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியும்,கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக டி காக் 50 ரன்களும்,தீபக் ஹுடா 41 ரன்களும் எடுத்திருந்தனர். இதன்பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,லக்னோ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
முதல் 25 ரன்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.இதன் பின் வந்த ஆண்ட்ரியூ ரசல் 45 மற்றும் சுனில் நரைன் 22 ரன்கள் எடுத்திருந்தனர்.
இவர்களை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டும் எடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.
14.3 ஓவரில் 101 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.