பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை; போராடிய வனத்துறை - பரபரப்பு!
பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை 24 மணி நேரத்திற்கு பிறகு தானாக வெளியேறியுள்ளது.
வீட்டிற்குள் சிறுத்தை
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளியையொட்டி மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
அப்போது நாயை பிடிப்பதறகாக சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. அப்பகுதி மக்கள் வெடித்த பட்டாசு சத்தத்திற்கு பயந்து அந்த சிறுத்தை வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளது. நேற்று காலை வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தது.
தானாக வெளியேறியது
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டபோது, சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒரு தானியங்கி கேமராவை பயன்படுத்தி சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் வீட்டிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை 24 மணி நேரத்திற்கு பிறகு தானாக வெளியேறியுள்ளது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்திருந்த நிலையில் சிறுத்தை தானாகவே வீட்டில் இருந்து வெளியேறியுள்ளது.