திருமண விழாவில் 200 பேரை அலறவிட்ட சம்பவம் - பகீர் சிசிடிவி காட்சிகள்!
திருமண மண்டபத்திற்குள் நுழைந்த சிறுத்தை குறித்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகுந்த சிறுத்தை
உத்தரப்பிரதேசம், லக்னோவின் புத்தேஷ்வர் சாலையில் எம்.எம்.லவ்ன் என்ற திருமண மண்டபம் உள்ளது. இங்கு திருமண நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
தொடர்ந்து விருந்து நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சிறுத்தை ஒன்று புகுந்தது. உடனே விருந்தினர்கள், கேட்டரிங் ஊழியர்கள் உள்ளிட்டோர் அலறி ஓடினர்.
முதல் மாடியில் இருந்தவர்கள் சிறுத்தையிடமிருந்து தப்பிக்க மேலிருந்து கீழே குதித்தனர். இதில் ஒருவர் படுகாயமடைந்தார். பலர் அங்குள்ள அறைகளில் பதுங்கி கதவை பூட்டி கொண்டனர். மணமகனும், மணமகளும் ஒரு காரில் தங்களை காப்பாற்றி கொள்ள பதுங்கியுள்ளனர்.
அதிர்ச்சி காட்சிகள்
இதனையடுத்து தகவலறிந்து விரைந்த வனத்துறையினர், ட்ரோன் உதவியுடன் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து சிக்கி கொண்டவர்களை மீட்டனர். ஆனால் சிறுத்தை திடீரென்று பாய்ந்து காவலர் ஒருவரின் துப்பாக்கியை வாயால் பிடித்து இழுக்க ஆரம்பித்தது.
#WATCH | Lucknow, UP | A leopard entered a wedding ceremony at MM Lawn on Budheshwar Ring Road in the Para police station area in Lucknow at around 11.40 pm yesterday. The forest department rescued the leopard after four hours.
— ANI (@ANI) February 13, 2025
Lucknow Divisional Forest Officer Sitanshu Pandey… pic.twitter.com/1PSfFSFRwB
சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தையை பிடித்தனர். இந்த போராட்டத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.