லியோ படத்திலிருந்து விலகுகிறா - த்ரிஷா செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
லியோ படத்திலிருந்து த்ரிஷா விலகுவதாக வதந்தி பரவிய வண்ணம் உள்ளது.
லியோ
விஜய்யின் 67வது படமான லியோவில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இது த்ரிஷாவுக்கும் 67வது படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார்.
திரையில் விஜய்-த்ரிஷா கொமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும். இந்நிலையில், 14 ஆண்டுகள் கழித்து லியோ படம் மூலம் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். லியோ படக்குழு காஷ்மீரில் இருக்கிறது.
த்ரிஷா விலக்கம்?
இந்தப் பட தொடர்பான ரீட்வீட்டுகள், லைக்குளை நீக்கிவிட்டார் த்ரிஷா. மேலும் இன்ஸ்டா ஸ்டோரீஸில் இருந்த லியோ போஸ்ட்டுகளை நீக்கிவிட்டார். இது இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆனால், ரீட்வீட்டுகள், லைக்குளை இரண்டு நாட்களில் நீக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் த்ரிஷா. இப்படத்தில், அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலி கான், கவுதம் மேனன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், ஏஜென்ட் டீனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இது லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ. கதை என கூறப்படுகிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.