LEO MOVIE REVIEWS: லியோ திரைப்படம் எப்படி இருக்கு?

Vijay Trisha Lokesh Kanagaraj Leo
By Thahir Oct 19, 2023 04:20 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லியோ”. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

Leo Movie Reviews

ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்து இருக்கிறதா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

திரைக்கதை

காஷ்மீரில் தனது மனைவி சத்யா, மகன் மற்றும் மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்வை கழித்து வருகிறார் பார்த்திபன். ஒரு பக்கம் விலங்கு நல ஆர்வலர், மறுபுறம் காபி ஷாப் பிசினஸ் என அமைதியான மனிதராக இருக்கும் பார்த்திபன், தன் குடும்பத்தினர் மீது கைது வைத்தால் கொலைவெறி கொண்ட மனிதராக மாறி விடுகிறார்.

அப்படி ஒரு திருட்டு கும்பலுடன் மோத போய் அவரது புகழ் இந்தியா முழுவதும் பரவுகிறது. தான் செய்த சம்பவத்தால் குடும்பத்துக்கு ஆபத்து இருப்பதை தெரிந்து கொண்டு பார்த்திபன் எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள நினைக்கிறார்.

இப்படியான நிலையில் கேங்ஸ்டரான ஆண்டனி தாஸ் பார்த்திபனின் போட்டோவை பார்த்து விட்டு அவரை "லியோ தாஸ்" என நினைத்து நெருங்குகிறார். ஆனால் தான் லியோ இல்லை என பார்த்திபன் மறுக்க, விடாமல் அவரை லியோ தான் என ஒப்புக்கொள்ள சொல்லி ஆண்டனி தாஸ் நெருக்கடி கொடுக்கிறார்.

நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்பட 7 மணி காட்சிக்கு அனுமதி? தமிழக அரசு புதிய அறிவிப்பு!

நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்பட 7 மணி காட்சிக்கு அனுமதி? தமிழக அரசு புதிய அறிவிப்பு!

இந்த கலவர பூமியில் லியோ தாஸ் யார்?.. ஆண்டனி தாஸ் லியோவை தேடும் காரணம் என்ன? ... பார்த்திபன் தான் லியோ என்றால் அவர் ஏன் நடிக்கிறார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை சொல்கிறார் "லியோ". 

விஜய்யை ஏன் ஆக்ஷன் ஹீரோவாகவே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதை சொல்லி விடும் அளவுக்கு அசத்தியுள்ளார். படம் முழுவதும் லியோ, பார்த்திபன் ஆகிய இரண்டு கேரக்டர்களுக்கும் விஜய் முடிந்த வரை வித்தியாசம் காட்டி நடித்துள்ளார்.

இதற்கு அடுத்து திரையில் தன் மிரட்டுவது ஆண்டனி தாஸ் ஆக வரும் சஞ்சய் தத் வில்லத்தனம் தான். இதனை தாண்டி த்ரிஷா, அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அனுராக் காஷ்யப் என ஏகப்பட்ட கேரக்டர்களை கதையின் நகர்த்தலுக்கு வைத்து கச்சிதமாக காய் நகர்த்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் படம் என்றால் சொல்ல வேண்டுமா.. படம் முழுக்க வன்முறை ஆட்டம் தான். முதல் பாதியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு இரண்டாம் பாதியில் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை சற்று சலிப்பையே ஏற்படுத்துகிறது.

படத்தின் ஹைலைட்டே லியோ தாஸ் கேரக்டர் தான் என்றாலும் பெரிய அளவில் அழுத்தமில்லாத கிளைமேக்ஸ் நெருடலாகவே உள்ளது. லோகேஷ் யுனிவர்ஸில் லியோவும் இணைந்துள்ள நிலையில், விஜய்க்கு டஃப் கொடுக்க சஞ்சய் சத், அர்ஜுன் போன்ற அதிரடி வில்லன்கள் இருந்தும் அவர்களுடனான சண்டை காட்சிகள் சட்டென்று முடிந்து விடுவது ஏமாற்றமே. 

படத்தின் பிளஸ் பாயிண்ட்

விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பு

நடனம்

சண்டை காட்சிகள்

குடும்ப வாழ்க்கை

போதைப் பொருள் ஒழிப்பு

மைனஸ் பாயிண்ட்

விஜய் பேசும் கெட்ட வார்த்தை

மொத்தத்தில் லியோ சூப்பர்

மதிப்பெண்  - 5/10

You May Like This Video