அங்க பயங்கர குளிர்.. விஜய் என்னை கூப்பிட்டு இதமாக கட்டிப்புடிச்சிப்பார் - சீக்ரட் சொன்ன லியோ பிரபலம்!
நடிகர் விஜய் குறித்து லியோ பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
லியோ
தமிழ் சினிமாவில் டாப் நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய படம் லியோ. இதனை பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படப்பிடிப்பு முழுவதும் காஷ்மீரில் எடுக்கப்பட்டது, இவருடன் இனைந்து நடிகை த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி இதுவரை தமிழ் சினிமா படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு உலகில் பல தியேட்டர்களில் வெளியாக போவதாக தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளார். சமீபத்தில் லியோ டிரெய்லர் வெளியாகி வாழ்நாள் சாதனையையே ஒரே நாளில் முறியடித்த நிலையில் இந்த படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பிரபலம் பேட்டி
இந்நிலையில், லியோ திரைப்படத்தில் நடித்த நடிகர் ஆத்மா பேட்ரிக் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "காஷ்மீரில் ஜாலியா டூர் போயிட்டு படம் எடுத்துட்டு வரல, மைனஸ் 22 டிகிரில எல்லாம் ஃபைட் சீன் எடுத்துருக்கோம். என்னோட பாடி டெம்பரேச்சர் விஜய்க்கு தெரியும்.

நண்பா இங்கே வான்னு கூப்பிட்டு என்னை கட்டிப் புடிச்சிப்பாரு, பெரிய நடிகர் என்கிற ஈகோ எல்லாம் துளி கூட விஜய்க்கு கிடையாது. பிகில் படத்திலும் அவருடன் பணியாற்றி உள்ளேன். அப்போ செம ஆக்டிவா இருப்பார்.
ஆனால், இங்கே ரொம்பவே டல்லாக இருந்தார். அந்த கேரக்டருக்காக தன்னை சோகமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் என்று பின்னர் தான் புரிந்தது. அவ்வளவு மெனக்கெடல். எவ்ளோ குளிரா இருந்தாலும், காலையில் ஷூட்டிங் வைத்தால் கூட மற்றவர்களுக்கு முன்பாக ஷார்ப்பாக ஆஜர் ஆகிவிடுவார்" துன்று கூறியுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan