பிரதமர் மோடி வருகை - தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் கைது...!
செஸ் ஒலிம்பியாட்
44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் இன்று 28.7.2022 முதல் 10.8.2022ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
பிரதமர் மோடி வருகை
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு தற்போது வந்தடைய உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
லெனின் பிரசாத் கைது
இந்நிலையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் முன்னெச்சரிக்கையாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி வருகையின்போது கருப்பு பலூனை பறக்கவிட இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து லெனின் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.