செஸ் ஒலிம்பியாட் போட்டி; தமிழக முதலமைச்சருக்கு பிற மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து..!
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று துவங்க உள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிற மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இந்த 44-வது செஸ் போட்டியில் 187 நாடுகள் பங்கேற்றுள்ளனர்.
பிற மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தான் அதிக வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து போட்டி வெற்றிகரமாக நடைபெற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,
அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு, சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்,கர்நாடக முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை,
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் ஆகியோர்
கடிதம், மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.