டாப் நடிகரின் உறவினருடன் உறவில் நடிகை லேகா - தீயாய் பரவும் தகவல்!
அமீர்கான் உறவினரை நடிகை லேகா வாஷிங்டன் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேகா வாஷிங்டன்
தமிழில் ’காதலர் தினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லேகா வாஷிங்டன். தொடர்ந்து ’உன்னாலே உன்னாலே’ ’ஜெயம் கொண்டான்’ ’வா’ ’கல்யாண சமையல் சாதம்’ ’அரிமா நம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதுதவிர தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் லேகா வாஷிங்டனை அமீர்கான் உறவினர் நடிகர் இம்ரான் கான் காதலிப்பதாக செய்திகள் பரவியது.
இம்ரான் கானுடன் காதல்
தற்போது இதுகுறித்து என் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் ஆரோக்கியத்தை லேகா வாஷிங்டன் ஏற்படுத்தினார். நான் மன அழுத்தத்தில் இருந்த போது எனக்கு உதவியாக இருந்தவர் அவர்தான்.
என்னை நன்றாக கவனித்துக் கொண்டதும் அவர்தான். அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை என்னால் தொடர முடியுமா என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அவர்கள் காதல் உறுதியானதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.