அல்லு அர்ஜுன் மாதிரி விராட் கோலி கைதா? ஏன்!
அல்லு அர்ஜுன் மாதிரி விராட் கோலியை கைது செய்ய முடியாது.
11 பேர் பலி
'புஷ்பா 2' சிறப்பு காட்சியில் நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் ரேவதி (39) என்ற பெண் உயிரிழந்தார்; அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

நடிகர் வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தரப்படாததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை; இதுவே கூட்ட நெரிசலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்பு குழு, மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பி.என்.எஸ் சட்டத்தின் 105, 118(1) மற்றும் 3(5) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB IPL வெற்றி பேரணிக்காக கிட்டத்தட்ட 2.5 லட்சம் பேர் திரண்டனர். கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
கோலி கைதா?
இந்த சம்பவத்தில் பெங்களூரு போலீசார் RCB பிராஞ்சைஸ், கர்நாடகா கிரிக்கெட் சங்கம் (KSCA), மற்றும் நிகழ்ச்சி ஒழுங்குபடுத்துநர் DNA Entertainment ஆகியோருக்கு எதிராக பி.என்.எஸ் 105 உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டம் வீரர்களை பார்க்க வந்தாலும், சட்ட ரீதியாக பொறுப்பு நிர்வாகம், நிகழ்ச்சி ஒழுங்குபடுத்துநர், மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் சம்பவத்தில் அவர் நேரடியாக கூட்டத்தை தூண்டியவர் எனக் கருதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan