11 பேர் உயிரிழந்த விவகாரம்; A1 - RCB அணி நிர்வாகம் - 2 பேர் கைது
கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 பேர் பலி
பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பெங்களூர் காவல் ஆணையர் பி. தயானந்தா உட்பட 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு ஒப்படைக்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆர்சிபி, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான டிஎன்ஏ எண்டர்டெயின் நெட்வொர்க்ஸ், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
2 பேர் கைது
மேலும் ஆர்சிபி அணி முதல் குற்றவாளியாகவும், டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் 2வது குற்றவாளியாகவும், கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழு 3வது குற்றவாளிகளாகவும் பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணி நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் ஹெட் நிகில் கோசலே, மும்பைக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.