1000 பேஜர்களை வெடிக்கவைத்து கொடூரம்; 3000 பேர் காயம்!
பேஜர்கள் வெடிக்கவைத்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் கொடூரம்?
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் போரில் 30 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஆயிரம் இடங்களில் றிய பேஜர் கருவிகளைக் கொண்டு தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 பேர் பலி
இதில் இதுவரை மொத்தம் 9 பேர் பலியாகி இருப்பதாகவும், 2,750 நபர்கள் வரை காயமடைந்துள்ளதாகவும், 200 நபர்கள் வரை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்து ஒரே சமயத்தில் இந்த பேஜர்கள் வெடிக்க வைக்கப்பட்டதாகவும், லெபனானுக்கான ஈரானிய தூதர் மொஜ்தபா அமானிக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை ஹிஸ்புல்லா அமைப்பு தான் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்னால் இஸ்ரேல் இருக்கிறது. இதில், ஹிஸ்புல்லா எம்.பி.யின் மகனும் கொல்லப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.