வெளிவந்த ஹாப்பி நியூஸ் - மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை !!
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வந்துள்ளது.
பள்ளிகள்
பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒரு வாரம் கழித்தே பள்ளிகளின் திறப்பு இருந்தது.ஜூன் 10-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டது.
நடப்பு ஆண்டின் தேர்வு அட்டவணையும் சில காலத்திலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது.பள்ளிகள் மும்முரமாக இயங்கி வரும் நிலையில், இந்த வருடம் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது.
விடுமுறை
இந்த நிலையில் தான், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழ்நாடு உயர்நிலை ஆசிரியர் கழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. தற்போது விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சுற்றிக்கையில், நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது ஆகஸ்ட் மாதத்தில் 2வது சனிக்கிழமை மற்றும் 4வது சனிக்கிழமை பள்ளி வேளை நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.