தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுப்பா? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழகம் முழுவதுமே நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
பள்ளிகள்
பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒரு வாரம் கழித்தே பள்ளிகளின் திறப்பு இருந்தது.ஜூன் 10-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டது.
நடப்பு ஆண்டின் தேர்வு அட்டவணையும் சில காலத்திலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது.பள்ளிகள் மும்முரமாக இயங்கி வரும் நிலையில், இந்த வருடம் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது.
லீவு
இது, அறிவிக்கப்பட்டபோதே விமர்சனத்திற்குள்ளானது. மாணவர்களுக்கு விடுப்பு வேண்டாமா என பலரும் கேள்விகளை தொடுத்தார்கள். ஆனால் ஒரு மாதம் பள்ளிகள் தொடர்ந்து இயங்கின.
இந்த சூழலில் தான், 2- ஆம் சனிக்கிழமையில் விடுமுறை அளிக்கப்படவேண்டும் என ஆசிரியர்களின் தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது.
அதற்கு செவிசாய்த்து, தற்போது தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் நாளை மாதத்தின் 2-ஆம் சனிக்கிழமை என்பதன் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.