மனைவி கோபமாக இருக்கா; பேசமாட்டிக்கிறா - நூதன விடுமுறை விண்ணப்பம் எழுதிய காவலர்
மனைவி கோபமாக இருப்பதை காரணம் காட்டி விடுமுறை கேட்டு காவலர் எழுதிய கடிதம் வைரலாகி உள்ளது.
லீவு இல்ல
உத்தர பிரதேசம், மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நௌதன்பா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அவர் எழுதிய விடுப்பு விண்ணப்பத்தில் தனக்கு ஏற்கனவே விடுமுறை கிடைக்காததால்

கோபமான தனது மனைவி போன் செய்யும் போது தன்னுடன் பேசுவதில்லை என்று புலம்பி இருக்கிறார். அத்துடன் பலமுறை மனைவிக்கு போன் செய்ததாகவும் ஆனால் அவர் தன் தாயிடம் போனை கொடுத்துவிட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நூதன விண்ணப்பம்
தற்போது தனது உறவினரின் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வருவதாக மனைவிக்கு உறுதியளித்து விட்டதாகவும். விடுமுறை கிடைக்காவிட்டால் வீட்டுக்கு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டு விடுப்பு கேட்டுள்ளார். இந்த விண்ணப்பத்தை படித்த உதவி கண்காணிப்பாளர் காவலருக்கு ஜனவரி 10 முதல் 5 நாட்களுக்கு சாதாரண விடுப்பு வழங்கி இருக்கிறார்.
மேலும், கடைமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு அவர்களின் தேவைக்கேற்ப விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விடுப்பு காரணமாக எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் விஷேச கவனம் செலுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.