காதலியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை நண்பர்கள்- அறையில் காதலன் செய்த கொடூர சம்பவம்!
சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் சட்டக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் வம்சி என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் ஓராண்டுக்கு மேலாகக் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 13ம் தேதி கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பரின் அறையில் தனிமையிலிருந்துள்ளனர். அப்போது அவரின் நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்தரங்க வீடியோவை வைத்துக் கொண்டு காதலன் வம்சியின் நண்பர்கள் மாணவியை மிரட்டிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவத்திற்குக் காதலனே உடந்தையாக இருந்துள்ளதை அறிந்த மாணவி அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மனமுடைந்த மாணவி நேற்று வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை மகளைத் தடுத்துள்ளார். மேலும் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தனது தந்தையிடம் கூறினார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காதலன் வம்சி மற்றும் அவரது 3 நெருங்கிய நண்பர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.