இன்று தான் கடைசி நாள்.. ரூ.2000 நோட்டுகளை உடனே வங்கியில் மாற்றிக்கொள்ளுங்கள்!
ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது.
நோட்டுகள் செல்லாது
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.2000 நோட்டு அறிமுகமானது. இந்த நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2023 செப்.30-ம் தேதிக்கு மேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் மக்கள் அனைவரும் வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொண்டனர், இதற்காக வங்கியில் சொரப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன.
கடைசி நாள்
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்கள் 93 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது. இன்றுடன் ரிசர்வ் வங்கி அறிவித்த காலக்கெடு முடிவடைகிறது.
அதனால் இனி மக்கள் ரூ.2000 நோட்டுகளை கொடுத்தால் அதனை வாங்கவேண்டாம் என்று அரசு போக்குவரத்துக்கு கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனை மீறி அவர்கள் வாங்கினால் அந்த பணத்திற்கு முழு பொறுப்பு அவர்களே என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், துணிக்கடைகள், சினிமா தியேட்டர், ஷாப்பிங் மால்களிலும் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. மேலும், இன்றுடன் காலக்கெடு முடிவடைவதால், காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.