பொது இடத்தில் ஆப்பிள் லேப்டாப்பை வைத்து சென்ற நபர் - நடந்த அதிசயம்!
பொது இடத்தில் ஆப்பிள் லேப்டாப்பை வைத்து சென்ற நபர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
யூடியூபர் செயல்
சீனாவின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சரான டின்கோ என்பவர் தனது விலைமதிப்புமிக்க, முக்கியமான லேப்டாப்பை பொது இடத்தில் வேண்டுமென்றே வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றின் மேசையில் ஆப்பிள் லேப்டாப்பை வைத்துவிட்டு செல்கிறார்.
நடந்த அதிசயம்
அரை மணி நேரமாக மால் முழுவதும் சுற்றிவிட்டு, மீண்டும் லேப்டாப் வைத்த இடத்திற்கே திரும்பிச் செல்கிறார். திரும்பி வரும் போது லேப்டாப் இருந்த இடத்தில் அப்படியே இருந்துள்ளது.
இத்துடன், "பாரிஸ் ஆக இருந்தால் 8 விநாடிகளில், புதுடெல்லி ஆக இருந்தால் 12 விநாடிகளில், அமெரிக்காவின் நியூயார்க் ஆக இருந்தால் 25 விநாடிகளில் மாயமாகியிருக்கும்.
ஆனால் சீனாவில் அப்படியே பாதுகாப்பாக இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.