அமெரிக்கா இல்லையென்றால் உலகமே அழிஞ்சுரும் - டிரம்ப் உறுதி!

Donald Trump United States of America
By Sumathi Sep 03, 2025 03:03 PM GMT
Report

அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் இறந்துவிடும் என டிரம்ப் கூறியுள்ளார்.

உலகம் அழிஞ்சிரும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகப்பெரியதாக மாற்றினேன்.

donald trump

ஆனால், ஜோ பைடன் நிர்வாகம் செய்த செயல்களால் சீரழியத்துவங்கியது. வரிகள் மூலம் அமெரிக்காவின் நிதி பலம் பெற்று வருகிறது. வரி காரணமாக அதிகளவு பணம் வருகிறது.

திசையெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்; 800 பேர் பலி - 2500க்கும் மேற்பட்டோர் காயம்!

திசையெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்; 800 பேர் பலி - 2500க்கும் மேற்பட்டோர் காயம்!

டிரம்ப் எச்சரிக்கை 

நமக்கு அனைத்தையும் வரி பெற்று தருகிறது. அமெரிக்கா இல்லை என்றால் உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும் என தெரிவித்துள்ளார். முன்னதாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், வரி மூலம் சீனா, இந்தியா, பிரேசில் நம்மை அழிக்கிறது.

அமெரிக்கா இல்லையென்றால் உலகமே அழிஞ்சுரும் - டிரம்ப் உறுதி! | World Will Perish Without America Warn Trump

அவர்கள் செய்வதை விட வரி சிறந்தது. உலகில் உள்ள எந்த மனிதர்களையும் விட வரியை நான் புரிந்து கொண்டேன். உலகில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது.

இனிமேல் வரி இருக்காது என என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது வரி விதிக்கவில்லை என்றால், இந்த சலுகை கிடைத்து இருக்காது என தெரிவித்துள்ளார்.